டூ வீலரில் சென்ற கணவன், மனைவி. பெட்ரோல் போட திரும்பியதில் திடுக் விபத்து! இரண்டு பேர் மரணம் அதிர்ச்சி வீடியோ

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியாகியுள்ளனர்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ரோட்டின் குறுக்கே உள்ள தடுப்பில் தனது சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியது.

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அவர்கள் யாரென விசாரிக்கையில் கோசேந்திர பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி என்பவரும் அவரது மனைவி ரேணுகா.

இருவரும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த விபத்தில் சிவனாண்டி மற்றும் பேருந்தின் படியில் நின்று கொண்டு வந்த டிக்கெட் பரிசோதகர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரேணுகாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.