புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற சிறுவன் சடலமாக வீடு வந்த அதிர்ச்சி! அதிவேக தனியார் பேருந்தால் ஏற்பட்ட பயங்கரம்!

காஞ்சிபுரத்தில் புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன் தனியார் பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.


காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவன் கார்த்திகேயன் அங்கு உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு பாடம் சம்பந்தமாக ஒரு புத்தகம் தேவைப்பட்டது அதை வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டபோது கார்த்திகேயனுக்கு தெரியாது அதுதான் தனது கடைசி பயணம் என்று. பரபரப்பான காமராஜர் சாலையை கடப்பதற்காக சைக்கிளுடன் சாலை ஓரத்தில் கார்த்திகேயன் நின்று கொண்டிருந்த போது அவருக்குத் தெரியவில்லை எமன் எதிரில் வருவது.

சற்று நேரத்தில் அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று கார்த்திகேயன் மீது மோதியதில் நிலைகுலைந்து விழுந்த அவர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினார். பேருந்தின் பின் சக்கரம் கார்த்திகேயன் மீது ஏறி இறங்கியது இதில் கார்த்திகேயன் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுனரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.