உடல் எடை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக்க ஆசையா! பாப்பரை தானியத்தை சாப்பிடுங்க!

ஓட்ஸ், கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்கள் போலவே பாப்பரையிலும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.


தற்போது நடத்திய ஆராய்ச்சிப் படி பார்த்தால் பாப்பரை கெட்ட கொலஸ்ட்ரால், இதய அழற்சி, இதய அடைப்பு போன்றவற்றை நீக்கி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனால் இதய நோய்கள் அவ்வளவு சீக்கிரம் உங்களை அணுகாது. இதில் ரூட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

இந்த பாப்பரையில் ஏராளமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இதை உணவாக எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய நன்மையை தருகிறது. அதிகமான சாப்பாடும் சாப்பிடமாட்டீர்கள். இதனால் உடல் எடையும் வெகுவாகக் குறைவும்.

இதிலுள்ள நார்ச்சத்துகள் மலம் கழித்தலை சுலபமாக்கிறது. வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் வராமல் தடுத்து வயிற்று உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃவுட் மைக்ரோபயாலஜி அறிவிப்பு படி இது குடலின் pH அளவை சமநிலை ப்படுத்துகிறது.

அமெரிக்கன் டயாபெட்டீஸ் அசோசியேஷன் படி முழுதானியங்எளில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த வகையான கார்போஹைட்ரேட் சத்துக்கள் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலப்பதால் உடனே சர்க்கரை அளவு அதிகமாகுவது தடுக்கப்படுகிறது. இந்த பாப்பரையில் ரூட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. மேலும் இன்சுலின் தடைபடுவதை சரி செய்கிறது.

சில பேருக்கு இது ஒத்துக் கொள்ளாமல் அழற்சியை ஏற்படுத்தும். வாயில் வீக்கம், படை, சரும வடுக்கள் போன்றவை ஏற்படலாம்.