சென்னையில் காதல் மனைவியை கொலை செய்து விட்டு மாமியாரையும் கத்தியால் தாக்கிய வழக்கில் கைதான விசாரணை கைதி புழல் சிறையில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதே போல வேறாரு புழல் சிறை கைதி மூச்சு திணறி உயரிழந்தார்.
மனைவி கொடூர கொலை! சிறையில் சைக்கோ கணவன் எடுத்த விபரீத முடிவு!
எம்.ஜி.ஆர்.நகர் அடுத்துள்ள நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (24) சந்தியா (20) என்ற பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன், காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவுடன், அவரது தாய் சரிதா, தந்தை சங்கர் உடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று அருண்குமாருக்கும், சந்தியாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு முற்றி தனது மனைவி சந்தியாவை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தான்.
தடுக்க வந்த பெண்ணின் தாயார் சாரதாவையும் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றான். இந்த வழக்கில் கைதான அருண்குமார், புழல் விசாரணை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பிளேடால் கழுத்தறு தற்கொலைக்கு முயன்றான். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
( விஷ்வல் : எம்.ஜி.ஆர் நகர் கொலை 30-ந் தேதி)
அதே போல புழல் சிறையில் விசாரணை கைதியான மதியழகன் மூச்சு திணறல் ஏற்பட்டு ஸ்டேன்லி கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மதியழகன் பேசின் ப்ரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 30-ந் தேதி பிணை கிடைத்தாலும் கைதிகள் வார்டிலேயே சிகிச்சை பெற்று வந்து நிலையில் உயிரிழப்பு .
(விஷ்வல் : கைதி படம் உள்ளது + ஸ்டேன்லி மருத்துவமனை)
இதே போன்று சென்னை கோயம்பேட்டிலும் மனனவியை வெட்டிய வழக்கில் கைதான விசாரணை கைதி காவல் நிலையத்தில் கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றார். நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த
கோவிந்தராஜ் (40) கடந்த 30-ந் தேதி தனது மனைவி கவிதாவை அரிவாள் வெட்டி வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாகக் கூறி சென்ற நபர் கட்டுமான பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் கிடந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(விஷ்வல்: கோயம்பேடு ஸ்டேஷன்)