நட்ட நடுச் சாலை..! கொத்து கொத்தாக செத்து விழுந்த பறவைகள்! திடீரென நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! பரபர காரணம்!

வேல்ஸ்: பிரிட்டன் சாலை ஒன்றில் பறவைகள் கொத்து கொத்தாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டனின் வேல்ஸ் பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஆங்லேசே தீவில் உள்ள சாலையில்தான் இந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, சாலையை ஒட்டி புதர் நிறைய இருந்தாலும், கடந்த செவ்வாயன்று திடீரென ஒரே நேரத்தில் சாலையின் நடுவே ஆங்காங்கே கொத்து கொத்தாக பறவைகள் இறந்து கிடந்துள்ளன.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சாலையில் பயணிக்கவே அச்சப்பட்டனர். அத்துடன் இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், இதுபற்றி தீவிர ஆராய்ச்சி செய்து வருவதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

ஹாலிவுட் படங்களில் வருவதுபோல நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் ஒருவேளை ஏலியன்களின் கைங்கர்யமாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.