பிரிட்டனில் 2 பெண்களை கொன்று தண்டனை அனுபவித்து வரும் நபருக்கு மருத்துவமனையில் சமையல் கலைஞர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
2 பெண்களை கொன்று சடலத்தை சமைத்து தின்றவனுக்கு சமையல் கலைஞர் வேலை! அதிர வைத்த சம்பவம்!

பிரிட்டனில் அதிக பாதுகாப்பு உள்ளதாக கருதப்படுவது பிராட்மூர் மருத்துவமனை. 2 கொலை செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் பிரஷர்
1998ம் ஆண்டு ஹேஸ்டிங் பகுதியில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் 40 வயது கிளாராவை கொன்று அவரது கைகளை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து 75 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றார் பிஷர். இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் உளவியல் ரீதியான அவருக்கு பிரச்சனை இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகல் பிராட்மூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பிஷருக்கு 46 வயது ஆகிறது. இந்நிலையில் சமையல் கலையில் வல்லுநரான பிரஷர் அவர் சிகிச்சை பெறும் பிராட் மூர் மருத்துவமனையிலேயே சமையல் கலைஞர் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 2 ஸ்பானிஷ் மாணவர்களை பிஷர் கத்தியால் குத்தியுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு நிறைந்த பிராட்மூர் மருத்துவமனையிலேயே பிஷருக்கு பணி வழங்கியது சிலருக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.