பீரியட்ஸ்..! அந்த 3 நாட்களில் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி! 29 வயதில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

லண்டன்: மாதவிடாய் நின்று போன இளம்பெண்ணிற்கு மீண்டும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை தூண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


பிரிட்டனின் கார்ன்வெல் பகுதியை சேர்ந்தவர் ஜேட் ஸ்பார்கோ. 29 வயதாகும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு 16 வயது முதலாகவே, மாதவிடாய் வரும் நாட்களில் கடுமையான வலி ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது. இதுதவிர, அடினோமியோசிஸ், எண்டோமெட்ரியோசிஸ் ஆகிய பாதிப்புகள் அவருக்கு இருந்துள்ளது.

இதனால், அதிக ரத்தப் போக்கை சந்தித்து வந்திருக்கிறார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் கரு தரித்துள்ளார். பிரசவத்திற்காக, மருத்துவமனையில் சேர்ந்த ஜேட்டுக்கு, ரத்தப் போக்கை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஆலோசித்தனர். இதன்பேரில் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு, மாதவிடாயை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தனர்.  

மாதவிடாய் தற்காலிகமாக நிறுத்தி விட்டாலும், தற்போது மீண்டும் படிப்படியாக, மாதவிடாய் தொடங்குவதற்கு தேவையான சிகிச்சை முறையை அவர் மேற்கொள்ள விரும்பியுள்ளார். இதன்பேரில், மருத்துவர்கள் புதிய சிகிச்சை தொடங்க ஆலோசித்து வருகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, மாதவிடாயை தற்காலிகமாக நிறுத்திய ஜேட் ஸ்பார்கோவின் தைரியம் பலராலும் பாராட்டப்படுகிறது.