மோசமான தொழிலில் சம்பாதித்த தாய்! இடைஞ்சலாக இருந்த பால்குடி மறவா குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

பிரிட்டனில் ஆபாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த குழந்தைகளை தாய் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.


பிரிட்டனில் உள்ள வார்விக்ஷிர்யில் போர்டன் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு லெக்ஸி ட்ராபெர் மற்றும் ஸ்கேர்லெட் என்ற 2 குழந்தைகள் உண்டு. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆண் நண்பர்களுடன் பேசியும் அவர்களுக்கு தனது ஆபாச புகைப்படங்களை அனுப்பியதோடு, அதன் மூலம் வரும் பணத்தில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

இதன் காரணமாக தனது இரண்டு அழகான குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாமல் போக பெரும்பாலும் பக்கத்து வீட்டு நபரின் பொறுப்பிலேயே குழந்தைகளை விட்டுச் சென்று தனியாக ஆன்லைனில் இது போன்ற ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து தனது சந்தோசத்திற்கும், வருமானத்திற்கும் தனது குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதை எண்ணி அவர்களை கொள்ள திட்டமிட்ட தாய், தனது முதல் குழந்தையான லெக்ஸியை தலையணையால் முகத்தை அமுக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். 

அதன்பின் கொலையை மறைக்க அவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய காலி நிலத்தில் புதைத்து விட்டார். அப்பொழுது ஒரு ஆண் நண்பரிடம் இருந்து அழைப்பு வர அவரிடம் போனில் கலகலவென்று சிரித்துப் பேசி உள்ளார். இதனை கண்ட மர்ம நபர் ஒருவர் அவர் மீது சந்தேகித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பெண்ணை பின்தொடர்ந்தனர். 

இதையடுத்து சரியாக இரண்டு வாரத்தில் தனது இரண்டாவது குழந்தையான ஸ்கேர்லட்டை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இறந்த குழந்தை சடலத்தை தூக்கி கொண்டு காரில் சென்றுள்ளார். இதனை கண்ட காவல் துறை அதிகாரிகள் அவரை சந்தேகித்து பின் தொடர்ந்தனர். 

பின் பெட்ரோல் நிலையம் ஒன்றில் டீசல் நிறப்பிவிட்டு முதல் குழந்தையை புதைத்த இடத்திற்கு அருகிலையே 2வது குழந்தையை புதைக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அதிரடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வருமானத்திற்கும் தனது சந்தோஷமான வாழ்விற்கும் குழந்தைகள் இடைஞ்சலாக இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் ஆதாரமாக அவர் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகள் அவரது மொபைலில் இருந்த நிர்வாண புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். பின் மேற்கொண்ட தொடர் விசாரணையில், அவரது குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.