கர்ப்பவதி போல் எப்போதும் வீங்கியிருக்கும் வயிறு..! ஒரு நாளைக்கு 60 முறை கழிவறை! இளம் பெண்ணுக்க ஏற்பட்ட பரிதாபம்!

பிரிட்டனில் ஒரு விதமான சிறுநீர்ப்பை நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒரு நாளைக்கு சுமார் 60 முறை கழிவறைக்கு சென்று வருகிறாராம்.


பிரிட்டனைச் சேர்ந்த ஜெனா தாம்சன் என்ற பெண் கடந்த பல வருடங்களாக ஒருவகை சிறுநீர்ப்பை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது வயிறு கர்ப்பமான பெண்ணின் வயிறு போலவே வீங்கி காணப்படும். இந்நிலையில் அவர் ஒரு நாளைக்கு சுமார் 60 முறை கழிவறைக்கு சென்று வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் தீவிரம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தான் அனுபவிக்கும் வேதனைகளை பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த நோய்க்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் நோய் முழுமையாக குணமடையவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார் .

இதையடுத்து அவர் பேசியதாவது interstitial cystitis எனப்படும் சிறுநீர்ப்பை நோய் தனக்கு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதற்காக பல ஆபரேஷன்கள் செய்தும் இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை மற்றும் நான் பலமுறை வயிற்று வலியால் அவதிப்படும் போது பெற்றோர்கள் உடனே மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் காலம் செல்ல செல்ல இந்த நோயின் தீவிரமும் சற்று அதிகமானது எனது சில நேரங்களில் எனது வயிறு கர்ப்பிணிப் பெண்ணை போலவே வீங்கி காணப்படும் அதனால் ஒரு நாளைக்கு சுமார் 60 முறை கழிப்பறைக்கு சென்று வர வேண்டியது இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த நோயின் தீவிரம் குறித்து பொது மக்களும் தெரிந்துகொள்ள வேண்டுமென பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.