ஆப்பரேசன் செய்யும் போது பிடித்த படம், பாடல் பார்க்கலாம்..! பிரபல மருத்துவமனையில் அடடே ஏற்பாடு! எங்கு தெரியுமா?

லண்டன்: ஆபரேஷன் செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு படுத்துக் கொண்டே டிவி பார்க்கும் வசதியை ஹாஸ்பிடல் ஒன்று செய்து கொடுத்துள்ளது.


பிரிட்டனில் உள்ள என்ஹெச்எஸ் மருத்துவமனைதான் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. போர்ன்மவுத் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் ஏதேனும் ஆபரேஷன் செய்துகொள்வோருக்கு, மருந்து மாத்திரைகள் அதிகம் பரிந்துரை செய்யப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தலையில் ஒரு ஹெட்செட் பொருத்தப்படும்.

இதன் வழியாக, வைஃபை இணைப்புடன் கூடிய செட்டாப் பாக்ஸ் ஒன்று தரப்படும். அதில் ஒளிபரப்பப்படும் நேரலை நிகழ்ச்சிகளை நோயாளிகள் படுத்தபடியே கண்டு மகிழலாம். இதற்கென மருத்துவமனை நிர்வாகம் புதிய மென்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளது. Now TV என கூறப்படும் இந்த மென்பொருளின் மூலம் நோயாளிகள் விரும்பும் நிகழ்ச்சிகளை படுத்துக் கொண்டே பார்க்கலாம்.  

இந்த புதிய திட்டத்தின்படி நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை செலவுகள் மிச்சமாகிறது என்பதோடு, அவர்கள் விரைவிலேயே நலம் பெற்று வீடு திரும்பவும் நேரிடுகிறது என்று, என்ஹெச்எஸ் ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.  

வித விதமான மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளுக்கு இடையே ஆபரேஷன் செய்த கையோடு ஹெட்ஃபோன் மாட்டிவிட்டு டிவி நிகழ்ச்சிகளை பார்க்க வைக்கும் இந்த மருத்துவமனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.