ஒரே நேரத்தில் 12 ஆண்கள்..! மாறி மாறி..! ஆனால்? நீதிமன்றத்தில் இளம் பெண் வெளியிட்ட பகீர் தகவல்.!

சைப்ரஸ்: கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய் புகார் அளித்த பிரிட்டிஷ் பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சமீபத்தில் சைப்ரஸ் நாட்டில் பரபரப்பு புகார் ஒன்றை எழுப்பினார். இதன்படி, அவரை 12 இஸ்ரேலிய ஆண்கள் அயியா நபா பகுதியில் கடந்த ஜூலை 17ம் தேதி தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார். இதன்பேரில் சைப்ரஸ் நாட்டு போலீசார் வழக்குப் பதிந்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு பற்றிய நீதிமன்ற விசாரணை சமீபத்தில் தொடங்கிய நிலையில், இதன் உண்மைத்தன்மை தற்போது வெளியாகியுள்ளது.  

ஆம், அந்த இளம்பெண், ஆண் ஒருவருடன் செக்ஸ் உறவு செய்திருக்கிறார். அதனை அந்த ஆண் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் வகையில் திடீரென அவர் உள்பட 12 பேர் மீது போலியான புகாரை போலீசில் இளம்பெண் கூறியுள்ளார். ஆனால், அவர் முழு சம்மதத்துடனே அந்த ஆணுடன் செக்ஸ் உறவு செய்திருக்கிறார்.

இதனை கண்டறிந்த நீதிபதி, அந்த பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 1,450 யூரோக்கள் (ரூ.1,15,907) அபராதமும் விதித்துள்ளார். முழு தண்டனை விவரம் ஜனவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அந்த பெண் நீதிமன்ற காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.