முதலிரவில் கட்டிய மனைவியை மைத்துனனுக்கு விருந்தாக்கிய கணவன்! 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

உத்தர பிரதேசத்தில், வரதட்சணை பிரச்னை காரணமாக, மணமகன் மற்றும் அவனது மைத்துனனால், முதலிரவில், மணப்பெண், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.


உ.பி.,யின் முசாபர்நகரில், சமீபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டார் கேட்ட வரதட்சணையை, மணமகள் வீட்டாரால் முழுவதுமாக வழங்க முடியவில்லை. இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையே சச்சரவு இருந்தது.

திருமணம் முடிந்த அன்று இரவு, முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன், அவனது மைத்துனனுடன் மது அருந்தி, போதையில் வீட்டுக்கு வந்தான்.முதலிரவு அறையில் காத்திருந்த மணப்பெண்ணை, மணமகனும், அவனது மைத்துனனால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பின் தான், விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்தது. மணமகன் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மனைவியை தனது மைத்துனனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கணவனை கைது செய்துள்ளபோலீசார் அவனது சகோதரனை தேடி வருகின்றனர்.