என் கழுத்துல தாலிய கட்டுடா! மணமேடையில் ஏறி மாப்பிள்ளையை தெறிக்கவிட்ட முன்னாள் காதலி!

திருமண மேடையில், காதலனிடம் முன்னாள் காதலி கெஞ்சியழுத காட்சியால், மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.


சீனாவில்தான் இத்தகைய வியப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய வீடியோ காட்சி முதலில் ஸ்டார் வீடியோ வெளியிட அது, தற்போது உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

30 நொடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியில், திருமண ஜோடிகள் 2 பேர், மணமேடையில் விருந்தினர்களை வரவேற்றபடி நிற்கின்றனர். அப்போது, ஒரு இளம்பெண், மணப்பெண் உடையில் மேடையேறி வந்து, மணமகனின் காலில் விழுந்து தன்னை மன்னித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு தரும்படி கெஞ்சி அழுகிறார்.  இதைப் பார்த்ததும், மணமகன் ஏதும் செய்ய முடியாமல் திணற, மணப்பெண்ணோ உடனடியாக,  திருமண மேடையில் இருந்து வெளியேறினார். 

ஆனாலும், அந்த முன்னாள் காதலி, மணமகனை பிடித்து, கதறி அழுகிறார். எனினும், மனம் இளகாத மணமகன், பாதியில் ஓடிய மணப்பெண்ணை சமாதானப்படுத்த பின்னாடியே ஓடுகிறார். அந்த முன்னாள் காதலி, மணமேடையிலேயே கதறி அழுகிறார். இதைப் பார்க்கும் பலரும், முன்னாள் காதலியை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி, சமூக ஊடகங்களில் காரசாரமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.