திருமணத்திற்கு சில நிமிடங்கள்! மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்! வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!

காதலனை கரம்பிடிக்க ஒரு சில நிமிடங்களே உள்ள நிலையில் கர்ப்பிணி உயிரிழந்த சோக சம்பவம் பிரேசிலில் நடைபெற்றுள்ளது.


பிரேசிலைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா கியூடெஸ் என்பவர் காதலனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் கர்ப்பம் ஆனார். இதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் சர்ச்சில் நடைபெற்று வந்தது. திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்த ஜெஸ்ஸிகாவுக்கு திடீரென கழுத்து வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து சென்ற காதலர் ஃபிலேவியோ கான்கல்வெஸ் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பிணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.  

பின்னர் அவசர அவரசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்த குழந்தை பத்திரமாக எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். வயிற்றில் இருந்து 6 மாதத்திலேயே குழந்தை எடுக்கப்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதாக மகிழ்ச்சியோடு இருந்த காதலிக்கு சில நிமிடங்களில் நேர்ந்த அசம்பாவிதத்தை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என அவருடைய காதலர் வேதனை தெரிவித்துள்ளார். வலியை உணர முடியாத கோமா நிலை, சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல் இருக்கும் நிலை ஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள்.

மூளைச்சாவு ஏற்பட்டால் காப்பாற்றுவது கடினம் என்றாலும், கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகளையும், கண்கள், இதய வால்வுகள், தோல், எலும்பு போன்றவற்றின் திசுக்களையும் தானம் செய்து மற்றவருக்கு வாழ்வளிக்கலாம்.