சபாஷ் போரிஸ் ஜான்சன்! இந்தியர்களுக்கு அமைச்சரவையில் 10% ஒதுக்கி கெத்து காட்டிய இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்தின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சன் அவர் உட்பட 34 பேர்கொண்ட அமைச்சரவையில் மூன்று இந்தியர்களுக்கும் ஒரு பாக்கிஸ்தான வம்சாவளியைச் சேர்ந்தவருக்கும் இடமளித்திருக்கிறார்.


உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் ப்ரீத்தி பட்டேல் ஏற்கனவே துணை அமைச்சராக இருந்தவர்.இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வமசாவளியினரின் எல்லா விழாக்களுக்கும் தவறாமல் அழைக்கப்படும் பிரீத்தி பட்டேல்,குஜராத் மாநில ஆனந்த் மாவட்டம் தாராபூரைச் சேர்ந்தவர். அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த மூன்றாவது இடத்தை வகிக்கிறார்.

அடுத்தவர் ,அலோக் ஷ்ர்மா,முந்தைய அமைச்சரவையில் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தவர்.உத்திரபிரதேச மாநிலம்,ஆக்ராவை சேர்ந்த அலோக் ஷர்மாவின் பெற்றோர் 1970ல் இங்கிலாந்தில் குடியேறினார்கள்.ஷர்மா இப்போது இங்கிலாந்தின் மேறுகு ரீடிங் தொகுதியில் வென்ற இவர் இப்போது சர்வதேச மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த ஆசாமி கொஞ்சம் விசேசமானவர்.39 வயதாகும் ரிஷி சுனாக் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவின் கணவர்!.தந்தை மருத்துவர்.முதலீட்டுத் துறையில் அனுபவம் மிக்கவர்.ரிச்மாண்ட் ( யார்க்‌ஷைர்) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்.இப்போது கருவூலத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் இப்போது இங்கிலாந்து மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.