லண்டன்: மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முயன்ற பெண்ணின் முகம் ஒருபுறமாக திரும்பிக் கொண்டது.
தலைவலி என்று ஹாஸ்பிடல் சென்ற அழகிய இளம் பெண்! ஒரே ஒரு ஆப்பரேசனால் முகமே கோணலாகிப்போன பரிதாபம்! அதிர்ச்சி சம்பவம்!
இங்கிலாந்தில் உள்ள புரோம்ஸ்குரோவ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா டெய்லர். 25 வயதான இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதன்பேரில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அதனை அகற்ற தீர்மானிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சமந்தா உடல்நலம் தேறினார். ஆனால், அறுவை சிகிச்சை தந்த அதிர்ச்சியில் ஒருநாள் அவரது முகம் ஒருபுறமாக பக்கவாதம் வந்தது போல கோணிக்கொண்டது. இதனை ஓரளவுக்கு சரிசெய்த மருத்துவர்கள் அதற்கு மேல் முடியாது என கைவிரித்து விட்டனர்.
இதனால், சமந்தா பார்ப்பதற்கு சற்று சிரிப்பது போலவும், முகம் ஒரு புறமாக திரும்பிக் கொண்டது போலவும் காட்சியளிக்கிறார். ''உயிர் பிழைத்ததே போதும், இது ஒரு சாதாரண பிரச்னைதான், இதனை பயமின்றி எதிர்கொண்டு சாதிப்பேன்,'' என சமந்தா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது ஒரு சிலருக்கு இத்தகைய நரம்பியல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்தான் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.