பெண் தோழி முன்னாடியா இப்படி நடக்கனும்? விபரீத பைக் ஸ்டண்ட்டால் இளைஞனுக்கு நொடியில் நேர்ந்த பரிதாபம்! வைரல் வீடியோ!

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்யப்படும் சாகசங்கள் ரசிக்கும்படியாக இருக்கும் அதே சமயத்தில் சில சமயத்தில் ஆபத்தை விளைவித்து விடுகிறது.


சில சமயம் நகைச்சுவையாக இருந்து விடுகிறது. முகம் தெரியாத ஆயிரக்கணக்காணோர் தங்கள் வீடியோவை ரசிக்க வேண்டும் என்பதற்காக இதுபோல் விதவிதமான வீடியோக்க பதிவிட்டு சில சமயங்களில் நோஸ்கட் வாங்கிக் கொள்கின்றனர்.

அதுபோல் ஒரு சம்பவம்தான் தற்போது வெளியான வீடியோவில் இருக்கிறது. தன்னுடைய கேர்ள் பிரெண்ட் முன்னால் பைக்கில் சாகசம் செய்ய முயற்சிக்கிறார் ஒரு இளைஞர். சாலையின் நடுவில் கேர்ள் பிரண்டை நிக்க வைத்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் லைட்டை போட்டுவிட்டு வேகமாக ஓட்டுகிறார்.

பின்னர் காதலி அருகே அந்த பைக்கை செங்குத்தாக நிறுத்த முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாரத விதமாக பைக் காதலி மீது விழ இருவரும் நிலைதடுமாறி கிழே விழுகின்றனர். பைக் தன் மீது விழுவதை பார்த்த காதலி பயத்தில் அலறுகிறார். பின்னர் கீழே விழுந்த அந்த இளைஞர் சிரிக்கிறார். இந்த வீடியோ ஒருவரை டிவிட்டரில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

ஆனாலும் அந்த வீடியோ அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லாததால் 2 ஆயிரம் பேர் கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பைக் ரேஸ் உள்ளிட்ட சாகசங்களை செய்ய வேண்டாம் என போலீஸ் அறிவுறுத்தி உள்ள நிலையில் இதுபோன்ற வீடியோக்களை பார்த்து மீண்டும் இளைஞர்கள் சாகசத்தில் இறங்கினால் ஆபத்து விளைவிக்கும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.