உல்லாசத்துக்கு மறுத்த காதலி! வெறியில் காதலன் செய்த கொடூரம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காதலன் கத்தியால் குத்தி காதலியை கொலை செய்துள்ளார்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவழங்குடி கிராமத்தை சேர்ந்த திலகவதி  என்பவர் விருத்தாசலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார்.

இந்நிலையில் அவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த ஆகாஷ் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்இருவரும் தங்கள் காதலை கைவிடுவதாக இல்லை. இந்நிலையில் நேற்று திலகவதியின் தாயார் அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் திலகவதி வீட்டில் தனியாக இருக்கும் போது  யாரோ அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய காக்கையார திலகவதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்தார். 

உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த  கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திலகவதியின் காதலன் ஆகாஷ் என்பவரை விசாரித்தனர்.

விசாரணையில் திலகவதியை கொலை செய்தது அவரது காதலன் ஆகாஷ் என்பது தெரிய வந்தது. நேற்று திலகவதியின் வீட்டில் இருந்த போது காதலன் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். காதலி மறுக்கவே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தியதாக ஆகாஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.  இதனை அடுத்து ஆகாஷை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.