பல ஆண்களுடன் தொடர்பு! கள்ளக் காதலிக்கு கள்ளக் காதலனால் ஏற்பட்ட விபரீதம்!

மும்பையை அடுத்த கோரேகானில் தனது தோழி வேறுநண்பர்களுடன் பழகுவது பிடிக்காமல் தோழியையும், 5 வயது மகனையும் கத்தியால் சரமாரியாகக் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கணவனைப் பிரிந்து பெற்றோருடன் வசிக்கும் சுனிதா ஜாதவ் என்ற பெண்ணுக்கு 8 வயது மகளும், 5 வயது மகனும் உள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமை சுனிதா தனது மகனை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினார். அப்போது அவர்களைப் பின் தொடர்ந்த தேவேந்திர வாகெல் என்பவன் இருவரையும் சரமாரியகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினான். 

இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் தற்போது நலமடைந்து வருகின்றனர். இந்நிலையில் தேவேந்திர வாகேல்லை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு ரெஸ்டாரண்ட் பணியாளரான தேவேந்திர வாகேல்லுடன் சுனிதா 4 ஆண்டுகளாக நட்புடன் (கள்ளக் காதலனுடன்) பழகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுனிதாவுக்கு வேறு சில ஆண் நண்பர்களும் இருந்தது தேவேந்திர வாகேலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த ஆத்திரத்தில் சுனிதாவையும் அவரது மகனையும் கத்தியால் குத்திய தேவேந்திர வாகெல் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.