செல்போனில் ஆபாச படம்! கோவையில் தங்கையை கர்ப்பமாக்கிவிட்டு அண்ணன் தலைமறைவு!

செல்போனில் ஆபாச படங்களை பார்த்து முறை தவறி தங்கையுடன் பழகிய அண்ணன் அவள் கர்ப்பமானதை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளான்.


கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வகுப்பறையில் மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டுள்ளார். மேலும் அவ்வப்போது அவர் வாந்தி எடுத்துள்ளார். இதே நிலை ஒரு வாரமாக நீடித்த காரணத்தினால் அந்த மாணவியின் ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியை ஆசிரியை பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

   அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த பெற்றோர் மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அண்ணன் செல்போனில் ஆபாச படம் பார்ப்பான் என்று மாணவி கூறியுள்ளார்.

   மேலும் தனக்கும் அண்ணன் ஆபாச படத்தை காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஆபாச படங்களில் வருவதை போலவே அண்ணன் தன்னுடன் நடந்து கொண்டதாகவும், அதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அண்ணன் மிரட்டியதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். இதனால் பயந்து போய் கடந்த ஒரு வருடமாக அண்ணன் சொல்வதை கேட்டு தவறாக நடந்து கொண்டதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

   இதனை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட பெற்றோர் தேடிய போது அவர்களின் மகன் தலைமறைவாகிவிட்டான். அதாவது தங்கை தன்னால் கர்ப்பம் என்கிற தகவல் வெளியில் தெரிந்த உடன் அந்த மாணவன் தலைமறைவாகியுள்ளான். இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி மாணவியின் பெற்றோர் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

   பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் போக்சோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை தேடி வருகின்றனர். மேலும் மாணவியின் கர்ப்பத்தை கலைக்கவும் அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அரசு மருத்துவமனையை அவர்கள் நாடியுள்ளனர். 

   செல்போனில் ஆபாச படங்களை பார்த்து முறை தவறி தங்கையுடன் பழகிய அண்ணன் அவள் கர்ப்பமானதை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளான்.