மும்பை: தான் நடிக்கும் நெருக்கமான காட்சிகளை மேற்பார்வை செய்யும்படி, சூப்பர்வைசர் ஒருவரை, நடிகை செலினா ஜெய்ட்லி நியமித்துள்ளார்.
செக்ஸ் காட்சிகளை மேற்பார்வையிட சூப்பர்வைசர்! முன்னணி நடிகையின் அடடே பிளான்!
பாலிவுட் நடிகை செலினா ஜெய்ட்லி, கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர், நடிக்கும் படங்களில், படுக்கையறை காட்சிகளும், கவர்ச்சி பாடல்களும் ஆக்கிரமித்திருக்கும்.
இந்நிலையில், இவர் தற்போது வருண் தவான், சோனம் கபூர் உள்ளிட்டோருடன் சேர்ந்து, சீசன்ஸ் கிரீட்டிங்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செலினா ஜெய்ட்லி, ''சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு பேசினார்.
அவர், ஹாலிவுட் படங்களில் நெருக்கமான காட்சிகளை மேற்பார்வை செய்ய ஒரு சூப்பர்வைசர் இருப்பதுபோல, இந்தி படங்களிலும் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என யோசனை சொன்னார். இந்த தகவலை நான் எனது புதிய படத்தின் இயக்குனரிடம் சொன்னேன். அவர், உடனடியாக, எனது யோசனையை ஏற்றுக் கொண்டார். இதன்படி, நெருக்கமான காட்சிகளில் எந்தளவுக்கு கவர்ச்சி இருக்க வேண்டும் என்பதை மேற்பார்வையிட ஒருவரை நியமித்துள்ளேன். அவர் ஆட்சேபனை தெரிவிக்கும் காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
செலினாவின் திடீர் முடிவை, தாங்களும் பின்பற்றலாமா என, சக நடிகைகள் பலரும் யோசிக்க தொடங்கியுள்ளனர்.