சிவகுமாரை பா.ஜ.க. மிரட்டுகிறது....காங்கிரஸ் கட்சியில் சேர வரவேற்பு..

சிவகுமாருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சூரியா, ஜோதிகாவை ஏதாவது ஒரு வகையில் சிக்க வைக்க வேண்டும், மிரட்டி வாயை மூடவைக்க வேண்டும் என்று பா.ஜ.க. பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் சிவகுமார் சேரவேண்டும் என்று அழைப்புவிடுத்திருக்கிறார், காங்கிரஸ் புள்ளியான ஜி.கே.முரளிதரன். சிவகுமார் காமராஜரைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார். அவரின் மகன் நடிகர் சூர்யா இலவசகல்வியைப்பற்றி பேசுகிறார். சொல்வதோடு நிற்காமல் பல ஆயிரம் பேரை படிக்கவைத்து பணியமர்த்தி பலமாய் வாழ பாதை போட்டுத்தருகிறார்...

அவரின் மருமகள் ஜோதிகா, ‘மக்களுக்கு ஆரோக்கியமான சுத்தமான வாழ்வு அவசியம் உடல்நலனிற்கு தேவையானதை செய்ய ஆலயங்களில் உண்டியலில் போடும் பணத்தில் பாதியையாவது ஊருக்கு மக்களுக்கு சுத்தத்திற்கு சுகாதாரத்திற்கு தானம் செய்து உதவுங்கள்...’ என்கிறார். இன்னொரு மகன் நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்

இயற்கை உரம் என்கிறார். நல்லவிஷயங்களை உழவர்களுக்கு உழவாரப்பணிபோல உடனிருந்து உதவி உற்சாகப்படுத்துகிறார். அதனால், கார்ப்பரேட் விவசாயகளுக்கு அடிவயிறு கலங்குகிறது

இவையெல்லாம் சனாதனப்பிரியர்களுக்கு சங்கடத்தை கொடுக்கிறது. சமூகத்தை, மக்களை விழிப்படையச்செய்யும் காரியத்தை எவர் செய்தாலும் விட்டுவைக்காத பாஸிச பாஜக அரசு இவர்களை மட்டும் பேசவிட்டு வேடிக்கை பார்க்குமா என்ன?.... விளைவு பத்தாண்டுக்குமுன் அண்ணன் சிவகுமார் பேசிய நியாயமான பேச்சை தூசி தட்டி

இப்போது வழக்கு போடுகிறது மோடியின் அரசு. திருப்பதி கோவில் தரிசனம் சாதாரணமனிதனுக்கு கிடைப்தில் உள்ள சிரமங்களைப்பற்றி அன்று அவர் சொன்னது அநேகரின் அனுபவமொழிதான்.. மகாத்மாகாந்தியாரே இரண்டுமுறை பூரி ஜெகன்னாதர் கோவிலில் பூசாரிகள் செய்த அலட்சியப்படுத்தலை கண்டு தன் சத்திய சோதனையில் விளாசியிருக்கிறார்.

யார் ஒருவரும் இயல்பாகக் கூட பேச முடியாதபடிக்கு எதற்கெடுத்தாலும், மிரட்டல்,வழக்கு, அவதூறுகள்.. என்பதாக சமூகத்தை சகிப்புத் தன்மையற்றதாகவும், மதவெறி,மற்றும் துவேச உளவியலுடன் வளர்த்தெடுக்க திட்டமிட்டு ஆதிக்க சக்திகளான பா.ஜ.க.வினர் இயங்கி கொண்டுள்ளனர். சமூகம் விழித்துவிடக்கூடாது என்பதில் அவ்வளவு ஜாக்கிரதையான அக்கறை அவர்களுக்கு. இந்த நேரத்தில், அண்ணன் சிவகுமார் நல்ல முடிவெடுக்கவேண்டும்.

அண்ணன் சிவகுமாரின் சீரிய குடும்பம் காங்கிரஸில் இணைந்து செயல்படவேண்டும் கர்மவீரர் காமராஜரின் குணத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அடுத்த தலைமுறையாவது அழுக்கில்லாத பூமியில் வாழும் வாய்ப்பினை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

சிக்குவாரா சிவகுமார்..?