கேவலமா திட்டாதீங்க ப்ளீஸ்! தி.மு.க.வுக்கு தூதுவிட்ட தமிழிசை!

சந்திரசேகர ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது என்று ஸ்டாலின் சொன்னபிறகு, ஜெயக்குமார் வழக்கம்போல் தி.மு.க.வை திட்டினார்.


ஆனால் திடீரென தமிழிசை சௌந்தர்ராஜனும், ‘பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிக்கொண்டு இருக்கிறது’ என்று ஒரு பிட்டை எடுத்துப் போட, அறிவாலயம் சூடாகிவிட்டதாம்.

ஏனென்றால் அமித் ஷாவை ஸ்டாலின் மருமகன் சபரீசன் பல்வேறு விவகாரங்களுக்காக சந்தித்துப் பேசி வருகிறார் என்பது உண்மைதான். ஆனால், அது இப்போதைக்கு வெளியே தெரியக்கூடாது என்பதுதான் தி.மு.க. மற்றும் பி.ஜே.பி. பிளான். ஒருவேளை பி.ஜே.பிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அப்போது தி.மு.கவுக்கு முறைப்படி தூது விடப்படுமாம்.

இந்த விவகாரம் தெரியாமல் தனக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார் தமிழிசை. அது மட்டுமின்றி, அந்த சந்திப்பு பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்கிறேன் என்றும் வாய்விட்டார். இப்படி தமிழிசை பேசியதும் கடுமையான விமர்சனம் பா.ஜ.க. மேலிடத்தில் இருந்துதான் வந்ததாம். விவரமில்லாம பேசி ஆட்சி அமைய வேண்டியதைத் தடுத்துடாதீங்க என்று திட்டியிருக்கிறார்கள்.

அதோடு தி.மு.க.வும் பொங்கியெழுந்து முரசொலியில் கேலிப் படம் போட்டு திட்டித்தீர்த்தது. அதுமட்டுமின்றி தி.மு.க. ஐ.டி. விங்க் கடுமையான விமர்சனங்களைப் போட்டு தமிழிசையை அவமானப்படுத்தும் வேலையிலும் இறங்கிவிட்டது. இதைப் பார்த்து டென்ஷன் ஆகிப்போன தமிழிசை இப்போது தி.மு.க.வுக்கு நெருங்கிய நண்பர் மூலம் தூது விட்டிருக்கிறாராம். நான் எதுவுமே சொல்லலைன்னு நினைச்சுக்கோங்க என்று சொல்லி அனுப்ப, அதை தி.மு.க.வும் ஏற்றுக்கொண்டதாம். அதன்பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் தமிழிசை.