தங்களுடைய கொள்கைகளும், பழக்கவழக்கங்களும் மட்டும்தான் சரியானது, உயர்வானது என்பதை சொல்வதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது பா.ஜ.க.வினர் பழக்கம். சமீபத்தில் முட்டை சாப்பிடுவது குறித்து பா.ஜ.க.வினர் செய்திருக்கும் விமர்சனம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
இன்று முட்டை சாப்பிட்டால் நாளை நர மாமிசம் சாப்பிடுவார்கள்..! பா.ஜ.க. அமைச்சர் புதிய கண்டுபிடிப்பு.
தமிழகத்தில் மாணவர்களுக்கு மதிய சாப்பாட்டில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டைகளை வழங்குவதற்கு அம்மாநில ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான கோபால் பார்க்கவாவான் அதிர வைக்கும் அளவுக்குப் பேசியிருக்கிறார்.
ஆம், இன்று குழந்தைகள் முட்டை மற்றும் மாமிசம் சாப்பிடுவது பிற்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாற்றிவிடும் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர், இந்திய கலாசாரத்தில் அசைவ உணவு என்பதே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளாக இருக்கும் போதே அவர்கள் முட்டைகளையும் இறைச்சிகளையும் சாப்பிட்டால் பிற்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இப்பேர்ப்பட்ட அறிவாளிகள் நிறைந்த கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.