பாஜகவிற்கு நிதி உதவி செய்வது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ..! காங்., திக் விஜய் சிங் பகீர்!

பிஜேபியின் தலைவர்களின் அதிரடி பேச்சுக்கு கொஞ்சமும் குறையாத பதிலடிதருவதில் முன்னணியில் இருப்பவர் திக் விஜய் சிங்.


முன்னாள் மத்தியபிரதேச முதல்வரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப் போனாலும் இவரது அதிரடி பேச்சுகளால் தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்தபடியே இருக்கிறார்.இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு வேலை செய்யும் இந்தியர்களில் ,முஸ்லீம்களை விட இந்துக்களே அதிகம், என்றவர் இன்னும் ஒருபடி மேலே போய்,பிஜேபியும்,பஜ்ரங் தள் அமைப்பும்,

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் ஒரு அதிர் வெடியை வீசி இருக்கிறார். இது பிஜேபியினரை கதிகலங்க வைத்திருக்கிறது,அதோடு விடாமல் வங்கிகள் இணைப்பு, பொருளாதார மந்த நிலை குறித்தும் திக் விஜய் சிங் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.

மோடி ஆட்சியில் பொருளாதார நிலை மிகவும் மந்தமடைந்து இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பணத்தை எடுத்திருக்கிறார்கள்,என்று குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த தாக்குதல்களுக்கு பிஜேபியின் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் பதிலளிக்கும் போது' செய்தித் தாள்களில் தன் பெயர் அடிபட வேண்டும் என்பதால் திக் விஜய் சிங் இப்படி பேசுவது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அவரும் அவருடைய தலைவரும் பாகிஸ்தானின் குரலையே எதிரொலிக்கிறார்கள்.இவர்களது தேசபத்தியைப் பற்றி இப்போது உலகத்துக்கே தெரியும் என்று பதில் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.திக் விஜய் சிங்கின் இந்தக் ' பகீர் 'குற்றச்சாட்டு உலகம் முழுவதும் வைரலானதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திக் விஜய் சிங்கின் கருத்தை மறுத்திருக்கிறது.