மலை உச்சியில் ஏறி பிகினி உடையில் புகைப்படம் எடுக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
செல்ஃபி எடுக்க மலை உச்சிக்கு நீச்சல் உடையில் சென்ற அழகி! பிறகு நேர்ந்த விபரீதம்!

தைவான் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஜிகி வு. இவர் வழக்கமான மாடல்களை போலல்லாமல் தனித்துவமாக விளங்க வேண்டும் என விரும்பினார். அதற்காக பல்வேறு மலைகளின் உச்சி மீது ஏறி பிகினி உடையுடன் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பரப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார் .
நூற்றுக்கும் மேற்பட்ட மலைகள்மீது இவர் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை அந்நாட்டில் உள்ள யுசன் தேசிய பூங்காவுக்கு சென்ற ஜிகி வு, அங்குள்ள மலை உச்சி மீது ஏறி புகைப்படம் எடுக்க முடிவு செய்தார். மலையேற்றத்திற்கு ஆன ஆடை அணிந்து கொண்டு உச்சியை அடைந்த அவர் பின்னர் பிகினி உடை அணிந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார்.
தனி ஆளாக இவர் அங்கு சென்றதும் புகைப்படம் எடுக்க முடிவு செய்ததும் அவரது உயிருக்கு உலை வைத்துவிட்டது. புகைப்படம் எடுக்க தயாரானபோது கால் இடறி மலையிலிருந்து விழுந்து பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிய அவர் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தனது நண்பர்களுக்கு தகவலை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மீட்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜிகி வுவை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் அவரது உடலை மீட்க முடியாமல் மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அதிக குளிரின் போது ஏற்படும் ஹைபோதெர்மியா காரணமாக அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.