மனைவி குழந்தையுடன் பைக் பயணம்! எதிரே ஏறி வந்த லாரி! சடன் பிரேக்கால் ஒரு குடும்பத்துக்கே நேர்ந்த பயங்கரம்! தேனி அதிர்ச்சி!

தேனி மாவட்டம் அருகில் திருமணத்திற்க்கு குடும்பமாக சென்ற குடும்பத்தினர் கோர விபத்தில் சிக்கிய சி சி டி வி காட்சிகள் வெளியாகி பதைக்க வைத்துள்ளது.


தேனி மாவட்டத்தில் வீரபாண்டி அருகில் மாரியம்மன் கோவில் பட்டியில் வசித்து வரும் வேல் முருகன் தனது மனைவி மாரியம்மா மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் கிளம்பியுள்ளார். இரு சக்கர வாகனத்தில் கிளம்பிய வேல் முருகன் சின்னமனூரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரில் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற வேல் முருகன். 

எதிர்ப்பாராத விதமாக டிம்பர் லாரி எதிரில் வர சற்றும் எதிர்ப்பார்க்காமல் பிரேக் அடித்துள்ளார், மேலும் நிலை தடுமாறிய பைக் கவிழ்ந்து சாலையில் சறுக்கியபடி சென்றுள்ளது. மேலும் சறுக்கி சென்ற வண்டி லாரியின் டயரில் சிக்கியுள்ளது மேலும் டயரில் சிக்கிய வேல் முருகன் சற்று தூரம் இழுத்து செல்லபட்டுள்ளார். மேலும் விபத்தின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மனைவி மாரியம்மா எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார் அதிர்ஷடவசமாக குழந்தை லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கோர விபத்து நடந்த இடத்தில் இருந்த சி சி டி வி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் காண்பவர் மனதை உலுக்குவதாகவும் உள்ளது.