பாய்ந்து வந்து கடித்த பாம்பு! உயிரை காப்பாற்ற தனது விரலை தானே வெட்டி வீசிய விவசாயி! ஆனால் டாக்டர்கள் சொன்ன திடுக் தகவல்!

பீஜிங்: பாம்புக் கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, மூட நம்பிக்கையில் ஒருவர் ஆள் காட்டி விரலை வெட்டிக் கொண்டுள்ளார்.


சீனாவின் ஷாங்க்யூ மாவட்டத்தைச் சேர்ந்தவர் 60 வயதாகும் ஜாங். விவசாயியான இவர்,  காட்டிற்குள் சென்று மரம்வெட்டியபோது, கையில் சாதாரண மரப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இது விஷமில்லாத பாம்புதான் என்றாலும் அப்பகுதி மக்கள், அந்த பாம்பை பற்றி பல விதமாக மூட நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதனால், தேவையற்ற பயம் கொண்ட ஜாங், தனது கையில் பாம்பு கடித்த ஆள்காட்டி விரலை கத்தியால் உடனே வெட்டி வீசிவிட்டார். இதையடுத்து, கையில் துணி ஒன்றை சுற்றிக் கொண்டு ரத்தக்காயத்துடனே சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாஸ்பிடலுக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.  

ஜாங்கை பரிசோதித்த மருத்துவர்கள், விஷமில்லாத பாம்புக் கடிக்கு ஓவர் பில்டப் கொடுத்து, கையை தேவையின்றி வெட்டிக் கொண்டுவிட்டதாகக் கூறி அவரை கடிந்துகொண்டனர். பிறகு, அவருக்கு செயற்கை விரல் பொருத்தி, பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவசரப்பட்டு விரலை வெட்டிக் கொண்ட இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.