பிக் பாஸ் 3! போட்டியாளராக களம் இறங்கும் ஸ்டார் நடிகரின் முதல் மனைவி!

பிக்பாஸ் தெலுங்கு 3-வது பாகத்தில் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய் பங்கு பெறுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.


தமிழைப் போன்றே தெலுங்கிலும் பிக்பாஸ் 3-ஆம் பாகம் வெளிவர இருக்கிறது. 3-வது பாகம் குறித்த அறிவிப்புவெளியானவுடனேயே அதில் பங்கு பெறவுள்ள நடிகர், நடிகைகள் குறித்து ரசிகர்களிடையே பல்வேறு ஊகங்கல் உலவி வருகிறது. 

அதில் முக்கியமானது அரசியல்வாதியாய் அவதாரம் எடுத்துள்ள நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனவியும் நடிகை மற்றும் இயக்குநருமான ரேணு தேசாயும் அதில் பங்கு பெற இருக்கிறார் என்று கூறப்படுவதுதான். இந்த தகவல் பரவியதையடுத்து பிக்பாஸ் தயாரிப்பாளர்களும் அவரை சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதனை மறுத்துள்ள ரேணு தேசாய் தான் பிக்பாஸ் வகையான நடிகை அல்ல என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் அதில் இடம்பெறப் போகும் நடிகர் நடிகைகளின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் ரேணு தேசாயை பிக்பாஸ் விடப்போவதாக தெரியவில்லை. பெரிய சம்பளத்திற்கு தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.