பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் "பிக் பாஸ்" நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியானது, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தமிழிலும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.


இதுவரை இந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23 முதல் ஆரம்பம் ஆக போகிறது. முதல் இரண்டு சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.  இதேபோல் பிக் பாஸ் - 3 வது சீசனையும் இவரே தொகுத்து வழங்க போகிறார். 

பிக் பாஸ் முதல் சீசனில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பிக் பாஸ் இரண்டாவது  சீசனில்  நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், 3 ஆவது சீசனுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த சீசனுக்கான படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்து கொண்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்து உள்ளது. 

தற்போது இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.  டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி, விசித்ரா, ராதாரவி, பூனம் பாஜ்வா,  கஸ்தூரி, ரமேஷ் திலக், மாடல் பாலாஜி, பிரேம்ஜி, மதுமிதா, ஸ்ரீமந்த், சந்தானபாரதி, பாடகர் க்ரிஷ், வி. ஜே ரம்யா, சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இருப்பினும் இந்த பட்டியல் தான் இறுதியானதா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது.. பொறுத்திருந்து பாப்போம்!!