சாண்டிக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துருக்கேன்! வனிதாவ கோர்ட்ல பார்த்துருக்கேன்! சேரன் டிராமா பண்றார்! பிரபல வழக்கறிஞர் தாறுமாறு பேட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தாண்டி வனிதாவிற்கு பிரத்தியேகமான மற்றொரு முகம் ஒன்று. அதனை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்:


வனிதா விஜயகுமார் என்பதைவிட பிக்பாஸ் வனிதா என்றால் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இவர் சில வாரங்களுக்கு முன்பு குறைந்த வாக்கு எண்ணிக்கை பெற்றதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டார்.

ஆனால் அதற்கு உண்மையான காரணமாக அவரைத்தேடி இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்ததும், அந்த வழக்கை அவர் முடிப்பதற்காகவே இப்படியான காரணம் கூறி வெளியேற்றபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது சொந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் சந்தித்து அவரே நீதிபதி முன் வாதாடி மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்திருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பிரபல தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னவே தமிழக மக்கள் வனிதா விஜயகுமாரை நன்கு அறிவர். காரணம் என்னவென்றால் அவர் பல சர்ச்சைகளில் சிக்கியவர். சமீபத்தில் அவர் தனது குழந்தை விஷயத்தில் நீதிமன்ற வழக்கு ஒன்றில் சிக்கி நீதிபதி முன் ஆஜர் படுத்தபட்ட நிலையில், நீதிபதி அவருக்கு பேச வாய்ப்பளித்தார்.

அப்போது அவர் கேட்ட கேள்விக்கு நீதிபதியே பதில் சொல்ல முடியாமல் திணறினார். அந்த அளவுக்கு அவர் ஒரு தைரியமான பெண் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிலைக் கேட்டவுடன் சமூக வலைதள வாசிகள் திகைத்துள்ளார். ஒருபுறம் வனிதாவை கிண்டல் கேலி செய்தவர்கள் இந்த கருத்தை கேட்டதும் அவரை புகழும் விதமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இதே போல் சாண்டிக்கு முதல் மனைவி காஜலிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொடுத்ததும் தான் தான் என்கிறார் இந்த வழக்கறிஞர். மேலும் சேரனின் உண்மையான கேரக்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படுவது இல்லை என்றும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் போட்டுத் தாக்கியுள்ளார் அந்த வழக்கறிஞர்.