நடிகை வனிதா சர்ச்சைக்கு பேர் போனவர், அவருக்காகவே சர்ச்சைகள் கிளம்புமா? அல்லது அவரே கிளப்புவாரா ? என்ற அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமானவர்.
ராபர்ட் மாஸ்டர் - வனிதா இடையே என்ன உறவு! புதிதாக வெளியான பகீர் வீடியோ!

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த வனிதா ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்பை மக்களிடம் பெற்றிருந்தார், குறிப்பாக மற்ற ஹவுஸ் மேட்ஸுடன், வனிதாவின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைப்பதாகவே அமைந்துள்ளது. அதிலும் அவர் உபயோகிக்கும் வார்த்தைகள், அவர் நடந்து கொள்ளும் தோரணை என மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கும் அவரது போக்கு பார்வையாளர்களை வெறுப்பாக்கியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் பட ரிலீசுக்கு பின்னர் தான் ராபர்ட் உடன் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, அவர் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து கேள்விகளுக்கு பதிலளித்த ராபர்ட் இதற்க்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இது பற்றி கேட்ட போது வனிதா ஒரு பப்ளிசிட்டிக்காக இப்படி சொன்னதாக கூறினார் என பதில் அளிக்கிறார்.
இதில் என்ன உண்மை நிலை என்பது வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தால் தான் தெரியும் . ஆனால் இவர்களுக்கு இடையே எந்த உறவு என்பது தற்போதைய விடியோ ‘மூலம்மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளத.