அசிங்கப்படுத்திய கமல்! ஆர்ப்பரித்த ரசிகர்கள்! எகிறிய வனிதா! சூடாகும் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 55 ஆம் நாளுக்கான பிரமோ வழக்கமாக வரும் நேரத்தை காட்டிலும் இன்றைக்கு மிக தாமதமாக தான் வெளியானது, இணையத்தில் ரசிகர்கள் பிக் பாஸை பிரமோ கேட்டு துளைத்து எடுத்து விட்டார்கள்.


இதனை அடுத்து சற்று முன்னதாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் பிரமோ வெளியானது இதனை தொடர்ந்து இரண்டாவதாக வெளியான பிரமோ தான் வனிதாவை கமல் நக்கல் அடிப்பது போல் வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுக்கும் வனிதா வந்த நாள் முதலாக வீட்டின் மற்ற ஹவுஸ் மேட்சை வைச்சு செய்ய, அவருக்கான தனித்த இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் இன்றைய பிரமோவில் வனிதா கமல் சார்கிட்ட நான் சொல்லுரன், கதவை திறந்து வைக்க சொல்லி, அப்படின்னு நீங்களே சொல்லலாமா ? எப்படி சொல்லுவீங்கண்ணு கேட்க,

அடுத்து வனிதா நான் கொளுத்தி போடுறதா சொல்லுறாங்கன்னு சொல்ல வரும் போது கமல் ஹாசன் நக்கலாக ஆடியன்ஸ் பக்கமாக திரும்பி கண் அடிக்க, அவர்களும் பலமாக கரகோஷம் கொடுக்கின்றனர்.

கடுப்பான வனிதா எதுக்கு சார்? எதுக்கு கைத்தட்டுறாங்கன்னு ஆதங்க படுவது போல வெளியான இந்த பிரமோ ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இன்றைக்கு தரமான சம்பவங்கள் இருப்பதாக நெட்டிசன்கள் குஷியில் இருக்கின்றனர்