என்னை யாருமே படுக்கைக்கு அழைத்தது இல்லை! பிக்பாஸ் வனிதா போல்ட் பேட்டி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, வனிதா விஜயகுமார் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.


அவரது முரட்டுத்தனமான செயல்பாடுகளுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவிக்கும் சூழலில், இதுபற்றி வனிதா விஜயகுமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், தனது செயலுக்காக தான் வருந்தப் போவதில்லை என்றும், ஆண்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் உலகில் பெண்களும் இவ்வாறு நடந்துகொள்வதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ''#MeToo போன்ற விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால் பலரின் ஆண் திமிர்  அடங்கிவிட்டது. ஆனால், எனக்கு எந்த #MeToo அனுபவமும் ஏற்படவில்லை.

அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்‌ஷியும், கவினும் மிக நெருக்கமாக பழகுவது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. செக்ஸ் வெறியில் அவர்கள் இருவரும் இவ்வாறு நடந்துகொள்வதாக நான் உணர்கிறேன்.

அது தவறான செயல். அதனால்தான், நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், என்னை வெளியேற்றிவிட்டார்கள்.

இதுதவிர, ஆண்கள் செக்ஸ்க்காக பெண்களை தொட நினைப்பதற்கு, பெண்களின் செயல்தான் காரணம். பெண்கள் சரியாக இருந்தால் ஆண்கள் எந்த காலத்திலும் தொந்தரவு தரமாட்டார்கள்,'' என்று வனிதா தெரிவித்துள்ளார்.