யாராவது சண்டை போடுங்கடி! போரடிக்குது! மீராவை வச்சி செஞ்ச சாண்டி!

நேற்று வரை பிக் பாஸ் வீட்டில் அடித்து நாறிய இரு குரூப் இன்றைக்கு ஆரம்பம் முதலே அமைதியாக இருக்க, அப்சட் ஆன சாண்டி.


யாராவது சண்ட போடுங்கடி, போரடிக்குதுன்னு மீராவை வம்பு இழுக்க, சிரிக்க முடியாமல் கஷ்டபட்ட மீராவின் குட்டை உடைத்தார் ஸ்காண்டி.  அதிலும் நேற்று சண்டை வரும் நிலை தெரிந்தவுடன் உடனடியாக சென்று தூங்குவதுப் போல பாவலாக் காட்டுறன்னு கலாய்ச்சு எடுக்க, அசடு வழிந்தார் மீரா.

இதற்கிடையில் என்னயா சண்ட போடுறீங்க?!? கையில் கிடச்சதை தூக்கி மண்டையில அடிக்கணும், மூன்சியை உடைக்கணும்ன்னு சாண்டி தூண்டி விட மவுன விரதத்தில் இருந்த மதுவையும் விட்டு வைக்கல.

யாருக்கோ விரிச்ச வலையில் தானா போய் மாட்டின மீனுன்னு போட்டு தாலிச்சு எடுத்துட்டார், அதுவும் சம்மந்தமே இல்லாமல் சிக்கிய சாமர்த்தியத்தை சரமாரியாக சாண்டி கலாய்த்து தள்ளினார்.

ஒரு வகையில் சாண்டி விளையாட்டாக செய்தாலும் கூட அவர் சொல்வதை யாராலும் மறுக்க முடியாது. நூதனமாக ஒவ்வொரு நபர் குட்டையும் குதூகலத்துடன் போட்டு உடைத்து வருகிறார் சாண்டி.