கவின் - சாண்டி இடையே வலுக்கும் மோதல்! மூட்டிவிடும் லாஸ்லியா! பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொரு நபரும் மற்றொரு நபருடன் இணக்கமாக இருப்பது போல தெரியலாம்.


ஆனால் சிலர் தேவைக்கு மாத்திரம் அப்படி இருப்பதும் மறுக்க முடியாத நிதர்சனம் இந்த நிலையில், கவின் லாஸ்லியா இருவருக்கும் இடையான நெருக்கம் ஊர் அறிந்த உண்மை. இதில் கவின் லாஸ்லியா இருவருக்கும் இடையான நெருக்கம் பலமுறை சேரனால் முறித்து விட பார்த்தாலும், ஒரு கட்டத்தில் அவரும் அதில் இருந்து பின் வாங்கினார். 

அடுத்த கட்டமாக கடைசி வாரத்தில் நடக்கும் மொத்த டாஸ்க்கிலும் சாண்டி லாஸ்லியாவை தெரியாமல் தள்ளியதற்க்கான பஞ்சாயத்து முடிந்த பாடில்லை. வந்த நாள் முதலாக அதிகமான இணக்கம் காட்டி வந்த கவின் சாண்டிக்கு இடையில் லாஸ்லியாவினால் பிளவு வரும் என யாரும் எதிர்ப்பார்க்க வில்லை. 

அதிலும் நேற்றைய டாஸ்க்கில் பிரண்டுன்னு சொல்லிட்டி கவினுக்கு ஏன் பாரபட்சம் பாக்குறீங்கன்னு லாஸ்லியா கேட்கும் போது சாண்டி முகம் மாறுகிறது. கவின் லாஸ்லியா, சாக்சி, சேரன் என இருந்த லிஸ்ட் மாறி அதில் கவினுக்கு பக்க தோஸ்த்தான சாண்டி சிக்கியுள்ளது, யாருமே எதிர்ப்பாராத ஒன்று. 

அதிலும் நெட்டிசன்கள் இது நம்ம லிஸ்டுலியே இல்லையே என கமெண்டு ,மூலமாக டிரெண்டாக்கி வருகின்றனர்.