உனக்கு என்ன தகுதி இருக்கு? வந்த வேலை முடிஞ்சிதா? இரண்டான பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பாராத விதமாக கெஸ்ட் அப்பியரண்ஸ் கொடுத்தார் சாக்‌ஷி, வைத்தியா மற்றும் அபிராமி அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.


மற்றவர்கள் வந்தபோது கூட ஓரளவு உணர்ச்சி பெருக்கில் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் திளைத்து இருக்க, மற்றொரு பக்கம் மொத்த கேமரா முழு போகஸும் , நம்ம கவின் மீது தான். இதற்கிடையில் அரண்டு போன கவின் அடுத்து என்னவும்.நடக்கலாம் என சுதாரித்து கொண்டு ஓரளவு ஒதுங்கி இருந்தாலும் சாக்‌ஷி நேரடியாக தன் பங்கிற்க்கு விளையாடுகிறார். 

முதற்பகுதியில் கவினுக்காக அழுது புலம்பிய சாக்‌ஷி எவிக்‌ஷனுக்கு பின்னர் கொடுத்த ரீ எண்டிரியில், ஆளே மாறி இருக்கிறார். எதற்கு எடுத்தாலும் கவினுக்கு எதிராக சீறுகிறார். அதிலும் நேற்றைய நிக்ழ்ச்சியில் கவினை முகத்திற்க்கு நேராக எனக்கு சொல்லி கொடுக்க எந்த தகுதியும் உனக்கு இல்லை என சாக்‌ஷி நேராக மோதுகிறார். 

இதற்கிடையில், வெளியில் சென்ற சாக்‌ஷி திரும்ப வாய்பில்லை என கவினும் கொஞ்சம் ஓவாராதான் போனாருன்னு சொன்னாலும் கூட,ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்க்கு வந்த வனிதா ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய நிலையில் மீண்டும் சாக்‌ஷி அதே வேகத்துடன் திரும்பியிருப்பது , வீட்டில் நடக்கவுள்ள சமவங்கள் என, 

இனி பிக் பாஸ் வீட்டிற்க்குள் கண்டெண்டிற்க்கு கொஞ்சமும் குறை இருக்காது என நெட்டிசன்கள் நக்கல் அடுத்து வருகின்றனர்.