ஷெரின் - தர்சனை குறி வைக்கும் வனிதா! கை கோர்க்கும் சாக்சி! திக் திக் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலாக, விளையாட்டை நேர்த்தியாக விளையாட கூடிய நபர் செரின் எனலாம, அவர் அவருக்கான தெளிவுடன் டாஸ்க்கை அணுக கூடியவரும் கூட,


வீட்டில் அனைவருக்கும் பிடித்த, ஆடியன்ஸில் பெரும் ஆதரவுடன் வீட்டிற்க்குள் இருந்தவர் செரின், மேலும் வீட்டில் ஒவ்வொரு நபரையும் மிகுந்த அன்பாக பாதுக்க கூடியவர். செரின் - தர்ஷன் இடையான காதல் காட்சிகள் கூட ஆடியண்சை ரசிக்க தூண்டியது தவிர ஆபாசமாக முகம்.சுழிக்க வைத்தது இல்லை. 

காதல் என்றாலும் கூட அதை சரியாக கையாள்வதாக செரின் பல இடங்களில் லாவகமாக பதிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் தான், வனிதா மீண்டுமாக வீட்டிற்க்குள்ளாக வந்தவுடன் முதல் டார்கெட் முகைன், கவின் என அடுத்த டார்கெட் வனிதா முடிவு செய்து ஸ்கெட்ச் போட்டதும் கூட தர்ஷனை தான், காரணம் அனைவருக்குமே தெரிந்தது தான், அவர் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறும் போது இருவருக்குமான சண்டை. 

இதன் மூலமாக தான் ஓவர் நைட்டில் தர்ஷன் டிரெண்டானதாக கூறப்படும் நிலையில் அந்த வன்மத்துன் பேரில் தான் வந்தது முதலாக வனிதா தர்ஷனுக்கு குறிவைத்து செய்பட்ட வண்ணம் உள்ளார். ஓரளவு நடந்த நிலையிலும் கூட, வனிதா கூடவே சுத்தும் செரினுடன் தர்ஷன் ஜோடியாக திரிவதினை வனிதாவினால் ஏற்று கொள்ள முடியவில்லை, பல முறை முயற்சி செய்தும் அவர் சற்று தடுமாற. 

நேற்று கெஸ்டாக ரீ எண்டிரி கொடுத்துள்ள சாக்‌ஷியும், வனிதாவுக்கு கை கொடுக்க, செரினுக்கு நல்லது போல தர்ஷனுக்கு வலை பிண்ணுகின்றனர். நடப்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய நிலையும் உள்ளது.