அபியின் குணம் இப்படிப்பட்டதா? கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு

கடந்த வாரத்தின் தலைவராக அபிராமி செயல்பட்டு வந்த நிலையில், அவரது தலைமை மீது வீட்டில் சிலருக்கு அதிருப்தி இருந்து வந்துள்ளது.


இதற்கிடையில் நேற்றைய டாஸ்க்கில், வனிதா ஆடிய போங்கு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது, இதற்கிடையில் தர்ஷன் வனிதாவை கேள்வி கேட்க, கடுப்பான வனிதா அபியின் மீது பாய்ந்தார்.

இன்றைய நிகழ்ச்சிக்கான பிரோமோவில் வனிதா அபியின் தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படித்துகிறார், அதிலும் அபியின் உண்மையான குணம் இது தானா அல்லது மற்றவர்கள் கவனத்தை பெற இவ்வாறு இயங்குகிறாரா ? என கேள்வி எழுப்ப,

உங்க குரல் மட்டும் தான் வீட்டுக்குள் ஓங்கி ஒலிக்கணுமா?  மற்றவர்கள் கவனத்தை இழந்து விடுவோம் என பயமாக உள்ளதா ? என கமல் அடுத்தடுத்து எழுப்பிய கேள்விகளால் வனிதா முகத்தில் ஈ ஆடல!

இதற்கிடையில் முன்னதாக வெளியான பிரமோவில், கமல் இன்றைய நிகழ்ச்சிக்கான பிரமோவில், தலைமை பற்றிய கருத்துகள் சற்று அழுத்தம் திருத்தமாக தான் இருந்தது.

அதிலும் தலைமை தன்னிச்சையாக, தைரியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கமல் கூறும் வார்த்தைகள் அபியின் கேப்டன் ஷிப்பை வறுத்து எடுப்பது போல நினைக்க தோன்றுகிறது.