முகைன் மாதிரி நேர்மையா இருக்கனும்! குரலை உயர்த்திய கமல்! வெளிறிப் போன சாண்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்மவர் கமல் ஒவ்வொரு வாரம் இறுதியிலும் அந்த வாரம் முழுவதுமாக வீட்டிற்குள்ளாக நடக்கும் சண்டை சச்சரவுகளில், அதிகபட்சமாக இருக்க கூடிய பிரச்சனைகளை கையில் எடுத்து விவாதித்து, நேரிடையாக சம்மந்தபட்டவரிடம் சொல்லி முடித்து வைத்து விடுவார்.


இந்த நிலையில், தான் இந்த வாரம்.முழுவதுமாக நடந்த கோல்டன் டிக்கெட் டூ பைனல் போட்டிக்காக, முகைன் தேர்ந்தெடுக்கபட்டு அதற்க்கான மெடலும் வாங்கினார். ஆனால் முகைன் அந்த மெடல் வாங்கிய போது தர்ஷனுக்கும் , சாண்டிக்கும் முக நாடியே மாறிவிட்டது.

அதிலும் கோல்டன் டிக்கெட் டூ பைனல் கொடுக்கும் போது, கமல், நேர்மையாக விளையாடி வென்றதாக ஒரு கருத்து சொல்லி இருப்பார். அதிலும் எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என இல்லாமல், நேர்மையாக விளையாடினீர்கள் என அழுத்தம் திருத்தமாக கமல் குறிவைத்து சொன்னது, யாருன்னு ஆடியன்ஸ் லேசா குழம்பிபாலும், 

ஒவ்வொரு டாஸ்க்கிலும் திட்டமிட்டு ஒரு நபரை குறி வைத்து அதற்க்கான சாதுர்யத்துடன் விளையாட கூடியவர் சாண்டி என்பதால், கமல், சாண்டியை தான் குறி வைத்து பேசியுள்ளார் என நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர் .