கைகளில் ரத்தக் காயம்! கட்டுடன் வெளியேற்றப்பட்ட மதுமிதா! தற்கொலைக்கு முயன்றதன் பரபரப்பு காரணம்!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கான சண்டை சச்சரவுகள் சாதாரணவைதான் என்றாலும் கூட கடந்த வாரங்களில் போட்டியாளர்கள் உணர்ச்சி பெருக்கில் எல்லை மீறுயுள்ளார்கள் என்பது தான் நிதர்சனம்.


இந்த நிலையில் சாக்‌ஷி - கவின் பிரச்சனைக்கு பின்னதாக ஓரளவு அமைதியான பிக்பாஸ் வீடு வனிதா வரவிற்க்கு பின்னதாக அமளித்துமளிதாகியுள்ளது, அதிலும் அவர் எலிமினேட ஆனதற்கு பிறகு நடந்த பல சர்ச்சைகளில் அவர் இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி என,

ரசிகர்கள் மற்ற நெட்டிசன்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர், இதற்கிடையில் கடந்த வாரம் வீட்டிற்க்குள் விருந்தினராக நுழைந்த வனிதா, வந்தவுடன் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவிற்க்கு தரமான பல சம்பசங்களை செய்துக்காட்டினார்.

இதில் ஒரு கருத்தை பின்பற்றி வந்த மது ஆரம்ப நாட்கள் முதலாக வீட்டிற்க்குள் இருக்கும் ஆண் / பெண் பாலின வேறுப்பாடுகளை குறித்தும் அவர்கள் மீது விளையாட்டு தவிர்த்த பல யுக்திகள் கையாளப்படுவது குறித்தும் பல கருத்துகளை முன் வைத்துள்ளார் என்றாலும் கூட,

கடந்த வாரம் முழுவதுமாக இந்த கருத்து மற்ற போட்டியாளர்களுக்கு முன்னதாக மதுவை வேறு மாதிரியாக காண்பித்துள்ளது எனலாம், அதிலும் அவர் அபிக்கு ஆதரவாக பேச போக அது திசைமாறி, அபியும் அடுத்த அணியுடன் இணைந்துக்கொள்ள,

இந்த நிலையில் மதுமிதா மனதளவில் மிக மோசமான உணர்ச்சி நெருக்கத்தை அனுபவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது, இதனை அடுத்து இன்று வழக்கமான நேரத்தில் பிரமோ வெளியாகவில்லை .

மேலும் நீண்ட நேரத்திற்க்கு பின்னதாக வெளியான பிரமோவில் மது கையில் கட்டுடன் வருவதும் சேரன் உடைந்த குரலில் பேசுவதும் பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியள்ளது