பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் முகினுக்காக அடித்துக் கொள்ளும் அபிராமியின் பின்னணி குறித்து விசாரித்த போது அவரால் ஆண் நண்பர்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்று தெரியவந்துள்ளது.
தோழிகளே கிடையாது! எல்லாம் ஆண் நண்பர்கள் தான்! பிக்பாஸ் அபிராமியின் கிளுகிளு பின்னணி!
தமிழகத்தை சேர்ந்த மாடல்களில் மிகவும் பிரபலமானவர் அபிராமி ஐயர். இவர் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் மாடலாக உள்ளார். கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் இவர் மாடலிங் செய்துள்ளார். மேலும் பல முக்கிய கம்பெனிகளுக்கு விளம்பர தூதராகவும் அபிராமி இருந்துள்ளார்.
தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் முக்கிய வேடத்தில் அபிராமி நடித்துள்ளார். இது தவிர அபிராமி மிகச்சிறந்த டான்சர். பரதநாட்டியம் மற்றும் வெஸ்டர்ன் டான்ஸ்களில் அசத்தக்கூடியவர்கள் என்கிறார்கள். மேலும் கார் ஓட்டுவது அபிராமிக்கு மிகவும் பிடித்தமானது.
சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வேண்டும் என்பது தான் அபிராமியின் எண்ணமாம். இதற்காகவே இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாராம். சென்ற முதல் நாளே கவின் மீது தனக்கு க்ரஸ் என்று கூறியதோடு சரவணன் மீனாட்சி சீரியலே தான் கவினுக்காகத்தான் பார்ப்பதாகவும் கூறி ஜொள் வடித்தார்.
ஆனால் கவின் அபிராமியை நாசூக்காக கழட்டிவிட இரண்டு மூன்று நாட்கள் கவினை பிராக்கெட் போட முயன்று கொண்டிருந்தார். அது முடியாத நிலையில் தனது பார்வையை முகின் பக்கமாக திருப்பினார் அபிராமி. இதற்கான காரணத்தை விசாரித்த போது தான் ஆண் நண்பர்களுடன் பழகுவது தான் அபிராமிக்கு மிகவும் பிடிக்குமாம்.
பெண் தோழிகள் என்று பெயரளவிற்கு ஒரு சிலர் அபிராமிக்கு உள்ளனராம். மற்றபடி அனைவரும் ஆண் தோழர்கள் தானாம். அதனால் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது முதல் கவின், முகின் என ஆண் நண்பரை பிடிக்க அபிராமி முயற்சித்து வருகிறாராம்.
முகின் செட் ஆகவில்லை என்றால் பிறகு தர்சனை அபிராமி டிரை செய்வார் பாருங்கள் என்று கூறி சிரிக்கிறார்கள் அபிராமியின் நண்பர்கள்.