அவனால நான் பைத்தியம் ஆகிட்டேன்! கண்ணீர் விட்டு கதறி அழுத அபிராமி!

பிக் பாஸ் வீட்டுக்குள்ள வழக்கமா எதாவது சின்ன பிரச்சனை கூட பூதாகரமாக மாறுவது மிக சாதாரணமானது தான் என்றாலும் , கடந்த சில வாரங்களாக அந்த வரிசையில் அபி - முகைன் சர்ச்சை நீண்ட வண்ணம் உள்ளது.


இந்த நிலையில் வனிதாவின் கெஸ்ட் விசிட் வீட்டில் உள்ள நிலையை, அதாவது அமைதியாக கேப்பாறற்று கிடக்கும் போட்டியாளர்களை சீண்டி அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.

அதில் உட்சபட்சமாக கடந்த 50 ஆம் நாள் நிகழ்ச்சியில் உள்ளே உழைந்த வனிதா எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்த போது டைம்பாம் எப்போது வெடிக்குமோ என காத்திருந்த ரசிகர்களுக்கு,

வனிதா முகைனை வச்சு செய்ய ஆரம்பித்ததும் , ஒரு தனி வித குஷுதான், இதில் துர்கா யார்னு தெரியுமான்னு வனிதாவின் ஒற்றை கேள்விக்கு பின்னதாக வீடே அலங்கோலமாக மாறியது.

ஒருக்கட்டத்தில் வழக்கம் போல அழுது புலம்ப ஆரம்பித்த அபியை , முகைன் சமாதானப்படுத்த பிரச்சனை மிக மோசமாக வெடிக்க துவங்கியது, நான் தோர்த்து போயிட்டேன் செரின் !

அபி கதறி அழும் காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் மிக உணர்ச்சி வசமாக மாறியது, வனிதா விசிட் யாருக்கு நல்லதோ இல்லையோ, வந்த உடன் அக்கா இவங்கள வெட்டி விட்டாங்க. இனி நடப்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்