பிக்பாஸ் வீட்டில் கசமுசா! கொளுத்திப்போடும் ஷெரீன் - சேரன் ! இன்று என்ன நடக்கும்?

பிக் பாஸ் வீட்டின் 21 ஆம் நாள் பிரமோ சற்று முன்னதாக வெளியாகியது, அதில் நேற்றைய மீரா தர்ஷன் பிரச்சனை தொடர்கதையாக மாறியுள்ளது.


தர்ஷனுக்காக சாதகமாகும் ஹவுஸ்மெட்ஸ், அபிக்கு எதிரணியில் சாக்‌ஷி !

தர்ஷன் தன்னை காதலிப்பதாக மற்றவர்களிடம் அலட்டிக் கொண்ட மீராவை கமல் நேற்று மக்கள் முன்னிலையில் கோர்த்து விட, திக்கு முக்காடிய மீரா தனக்கு வந்த கதையெல்லாம் விட,

மற்றொரு பக்கம் மீரா தான் தன்னை அம்மாவிடம்.பேச அழைத்தார் என தர்ஷன் போட்டு உடைக்க நிகழ்ச்சி ரணகளமானது, இந்த நிலையில் மீராவின் இந்த திடீர் காதலை செரினும் சேரனும் விமர்சிக்கும் காடைகளும் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதற்கிடையில் இன்றைய பிரமோவில் இந்த வார எவிக்‌ஷனில் வீட்டில் உள்ள மற்ற நபர்களின் ஆதரவு தர்ஷனுக்காக வலுக்கிறது , தர்ஷன் உட்பட மீராவுக்கு எதிரான வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது,

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இணைப் பிரியாத இரு தோழிகள் எதிரும் புதிருமாக நிற்க்கும் நிலை சற்று புருவங்கள் உயர்த்த வைத்துள்ளது, அபிக்கு எதிராக முதல் குறை சாக்‌ஷி தனது நிலைப்பாடினை எடுத்துள்ளார்.

கடந்த வார கேப்டனாக இருந்த அபியின் மீதான அதிருப்தியை இந்த வாரம் கேப்டனாக ஆன முதல் நாளில் பிரதிபலிக்கிறார் சாக்‌ஷி, வனிதா கடைசியாக கொளுத்தி போட்ட வேட்டு இப்போது வெடிக்கிறது போலும், இன்றைக்கு தரமான பல சம்பவங்கள் உள்ளது என குஷியில் உள்ளனர் பார்வையாளர்கள்.