மும்பை: ஜோடியாக இருவர் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் காட்சிகளை ஒளிபரப்பியதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டனம் எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்கள்! வீடியோ வெளியாகி பரபரப்பு!

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இதன் வெற்றியாளராக முகேன் அறிவிக்கப்பட்டுளளார். இந்நிலையில், இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில், மஹிரா சர்மா மற்றும் அசிம் ரியாஸ் ஆகிய இருவரும் ஜோடியாய் கட்டிலில் கட்டிப்பிடித்தபடி படுத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் தரப்படுவது வழக்கம். இதன்படி, Bed Friend Forever என்ற தலைப்பில் தரப்பட்ட டாஸ்கில், மஹிராவும், அசிம் ரியாஸூம் படுக்கையில் கொஞ்சியபடி பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்திற்கு, சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது. ஆம். பிராமண பெண்ணான மஹிராவை, முஸ்லீம் ஆண் அசிம் ரியாஸ் எப்படி தொடலாம் எனக் கேட்டு, சமூக ஊடகங்களில் பலரும்
விமர்சிக்கின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில், இதுபற்றி பிக் பாஸ் இந்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ''சமூக ஊடகங்களில் பரவி வரும் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள், அசிம் ரியாஸ் மற்றும் மஹிரா, அவர்கள் 2 பேரும் பிக் பாஸ் 9 சீசனில் பங்கேற்ற சுயாஷ் ராய் மற்றும் கிஸ்வார் மெர்ச்சண்ட் ஆகியோர்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.