என்ன மன்னிசிரு லாலா..! சாண்டியின் முதல் மனைவி வெளியிட்ட கண்ணீர் வீடியோ! காரணம் இது தான்..!

லாலாவுக்காகத் தான் பிக் பாஸ் பைனலுக்கு தான் போகவில்லை என சாண்டியின் முதல் மனைவி காஜல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 2ம் இடத்தில் வெற்றி பெற்றவர் சாண்டி. பிக் பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் தன் மகள் லாலா பற்றி அவர் பேச மறந்ததில்லை. இதனால் சாண்டியைப் போலவே மகள் லாலாவும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாகி போனார். முதல் சீசன் போட்டியாளரான காஜல், சாண்டியின் முதல் மனைவி ஆனாலும் முறைப்படி இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது அவர்களுக்குள் எதுவும் இல்லையென ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி வருகிறார் காஜல்.  

பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பமான நாள் முதல் சாண்டிக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கம் மூலம் வாக்கும் சேகரித்து வந்த காஜல் விமர்சகராகவும் இருந்து வந்தார். ஆனால், நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விட்டார். என்றாலும் சாண்டியின் மகள் லாலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டார்.

பிக் பாஸ் சீசன் 3 பினாலேவுக்கு காஜல் செல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் அவர் பங்கேற்கவில்லை. அதற்கான காரணத்தையும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 பிக் பாஸ் பினாலேவுக்கு அழைத்திருந்தனர். ஆனால் லாலாவுக்காக நான் விட்டுக் கொடுத்து விட்டேன். அங்கு செல்லப் போவதில்லை' என உருக்கமாக அவர் பேசியுள்ளார். காஜலின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ‘என்னாச்சு.. ஏன் இவ்வளவு சோகம்?' என அக்கறையுடன் விசாரித்துள்ளனர். மேலும் சிலரோ, ‘கவலைப் படாதீங்க டான், பழைய மாதிரி சிரிச்சிட்டே இருங்க' என அறிவுரையும் கூறியுள்ளனர்.