காதலில் சொதப்புவது எப்படி? கவினை கலங்க வைத்த லாஸ்லியா! கதற விட்ட சாக்சி!

காதலில் சொதப்புவது எப்படி என நேர்த்தியாக பாடம் எடுத்தவர் கவின், மற்றவர்களுக்கு அவர் கொடுத்த அட்வைசில் எள் அளவு உபயோகித்தாலும் இந்த நிலை இல்லையே.


ஆம் வீட்டுக்குள் வெடித்த டைம்பாம், சிதறிய காதல் ஜோடிகள்  என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர், அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் கவினும் லாஸ்லியாவும் கதைத்துக் கொண்டு இருக்க, இடையில் வந்த, சாக்‌ஷி சாக்லேட் கொடுக்க, தன்னுடைய பங்கையும் கவினுக்கு ஆசையாக கொடுக்க அவர் திரும்புவதுக்குள்ளாக, சாக்கொலேடை லாஸ்லியாவுக்கு கொடுத்து கரெக்ட் பண்ண,

இதை நேரம் பார்த்து சாண்டியும் செரினும் சாக்‌ஷி முன்னதாக கோர்த்து விட காண்டான சாக்‌ஷி கவினை வச்சு செய்ய, கையை காலை புடிச்சு கவின் கிச்சன்னுல கெஞ்சிய சம்பவம் தப்பி தவறி பார்த்த லாஸ்லியா, தன்னால் தான் இந்த நிலையென பீலிங்குடன் சாக்கிலேட்டை திரும்ப கொடுக்க , அதை வாங்க கவின் மறுத்தார்.

இருவருக்கும் இடையான பாச போராட்டத்தில் மொத்த லாஸ்லியா ஓடிபோய் கண்ணீர் விட்டு அழுத சம்பவம், சேரனையும் கண்கலங்க வைத்தது, இந்த காட்சிகளை பார்த்த பார்வையாளர்களும் தன்னிலை மறந்து கண்ணீர் விடும் அளவுக்கு லாஸ்லியா பார்வைகளுடன் ஒன்றிப்போய் உள்ளார்.