கொஞ்சம் தள்ளி நில்லுமா! தொகுப்பாளினி டோஷிலாவிடம் வைரமுத்து குறும்பு!

அருகில் நின்ற தொகுப்பாளினியை கவிஞர் வைரமுத்து கொஞ்சம் தள்ளி நிற்க சொன்னதால் அரங்கில் கரகோஷம் எழுந்தது.


தமிழில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. பல்வேறு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான.இவர் மீது பாலியல் புகார் எழுந்ததால் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சினிமாவுக்கு வந்த புதிதில் தம்மை கவிஞர் வைரமுத்து அறைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி புகார் கூறினார்.

மீடு என்ற ட்விட்டர் இயக்கத்தின் வாயிலாக அவர் கூறிய புகாரால் பெரும் சர்ச்சை உருவானது. சின்மயிக்கு ஆதரவாக பெண்ணியவாதிகளும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.ஆனால் சின்மயி கூறிய புகாரை வைரமுத்து திட்டவட்டமாக மறுத்தார். உரிய ஆதாரங்களை சின்மயி கொடுக்க தவறியதால் வைரமுத்து மீதான பாலியல் புகார் நீர்த்துப் போனது.

இந்த நிலையில் கதாசிரியர் கலைஞானத்திற்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கவிதை நடையில் வைரமுத்து பேசிக் கொண்டிருந்த வேளையில், தொகுப்பாளினி டோஷிலா என்பவர் வைரமுத்துவை நெருங்கினார். இதை பார்த்த வைரமுத்து ஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லுமா என்று கூறினார்.

தனக்கு அச்சமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து தொகுப்பாளினி நகர்ந்து செல்லவே அங்கு கரகோஷம் எழுந்தது. பாலியல் சர்ச்சைகளில் சிக்கிய காரணத்தால்தான் வைரமுத்து இவ்வாறு கூறியதாக ஒருபுறம் பேசப்பட்டாலும், தன்னை சீக்கிரம் பேசி முடிக்குமாறு கூறுவதற்கான அறிகுறிதான் அந்தப் பெண் அருகில் வந்ததாக நினைத்து வைரமுத்து நகர சொல்லி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.