ஏர் இந்தியாவுக்கு அடுத்து பாரத் பெட்ரோலியம்... சபாஷ் நிர்மலா சீதாராமன்.

காசு இல்லையென்றால் வீட்டில் இருக்கும் சாமானைக் கொண்டு போய் அடகுக் கடையில் வைத்து பணம் வாங்குவதுதான் ஏழைகளுக்கு இருக்கும் ஒரே வழி. அவர்கள் படிக்காதவர்கள் என்பதால், வேறு எப்படி பணம் சம்பாதிக்கவும் தெரியாது.


அந்த ஏழைகளின் மனப்பான்மைதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான உண்மை. ஆம், நிதி சிக்கல் என்றால், அதனை எப்படி சரிசெய்வது என்று யோசிக்காமல், எதையாவது விற்பனை செய்து பணம் பார்க்க நினைக்கிறார். ஆம், அந்த வகையில் இப்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அரசு பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும் வெளியிட்டார். அதில் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டமும் அடக்கம். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனைத்தொடர்ந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது. அடுத்து எதை விற்கப் போகிறாரோ..?