சின்ன சின்ன உடல் பிரச்சனைக்கெல்லாம் மாத்திரை சாப்பிட வேண்டாம்.. இதோ சிறந்த சித்த மருத்துவம்!

சின்ன சின்ன உடல் பிரச்சனைக்கெல்லாம் மாத்திரை சாப்பிட்டால் உடல் எதிர்ப்பு சக்தி குறைத்திடுமாம். அதனால் சில சித்த வைத்தியங்களை தெரிந்து கொண்டு உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்கள்.


நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

காய்ச்சல் குணமாக: செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

அஜீரணசக்திக்கு: சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.